சினிமா செய்திகள் நடிகை

கமலுக்கு நோ ரஜினிக்கு ஓகே – நயன்தாராவின் முடிவுக்குக் காரணம் என்ன?

பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில்,நாயகியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறாராம். ஏற்கெனவே ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா, ‘சிவாஜி’ படத்தில் அவருடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார். ‘குசேலன்’ படத்திலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமல் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டு பிறகு பின்வாங்கிய நயன்தாரா இப்போது ரஜினி ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கமல் படத்தை இயக்கும் ஷங்கர், சொன்ன நாட்களுக்குள் படத்தை எடுக்கமாட்டார்,கொடுத்த தேதிகளை வீணாக்கிவிட்டு மீண்டும் தேதிகள் கேட்டு சிரமப்படுத்துவார், ஏ.ஆர்.முருகதாஸ் அப்படி அல்ல சொன்னபடி எடுத்துவிடுவார் என்று நம்பியே கமலுடன் நடிக்க மறுத்த நயன்தாரா ரஜினியுடன் நடிக்கச் சம்மதம் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.

Related Posts