சினிமா செய்திகள்

இளையராஜாவை அசிங்கப்படுத்திய ரஜினி – வெடிக்கும் விமர்சனங்கள்

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டுவிழா டிசம்பர் 7 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விழாவில் ரஜினி பேசும்போது, அனிருத் நம்ம வீட்டுக் குழந்தை. அவரது வளர்ச்சி படத்துக்குப் படம் சந்தோஷம். இளையராஜாக்கு ஸ்டோரி சென்ஸ் இருப்பது போல எந்த இசையமைப்பாளருக்கும் இல்லை. அந்த க்வாலிட்டி அனிருத்துக்கு இப்போதே வந்துள்ளது. பேட்ட ஆலபத்தை விட தர்பார் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று பேசினார்.

அவருடைய இந்தப் பேச்சுக்குக் கடும் விமர்சனங்கள் வருகின்றன.

இது எப்டி இருக்கு தெரியுமா நாப்பது வருஷமா ரஜினி சேத்து வச்ச சூப்பர் ஸ்டார்ன்ற மாஸ்ஸ லத்திகா படத்துலயே பவர் ஸ்டார் மிஞ்சிட்டார்ன்றது போல தான்.

ஒப்பீட பாத்தியா ஒரு ஜாம்பவானோடு பில்லாக்கா பையன, தரம் தாழ்ந்த ரஜினி.

தன் மனைவியின் உறவினர் பையனைப் புகழ்வதற்காக இளையராஜாவை அசிங்கப்படுத்திவிட்டார் ரஜினி.

இவை போன்று ஏராளமான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

Related Posts