சினிமா செய்திகள்

கதையைக் கிடப்பில் போட்ட ரஜினி திகைத்து நிற்கும் கமல்

மாநகரம், கைதி ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது விஜய் விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இதற்கடுத்து இவர் ரஜினி நடிக்கும் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன.

அந்தச்செய்தி வந்ததோடு சரி அதன்பின் என்னவானது என்பது யாருக்கும் தெரியவில்லை. 

என்ன நடந்தது?

ரஜினிக்கு ஒரு கதையை லோகேஷ் கனகராஜ் சொல்லியிருக்கிறார். அந்தக்கதையில் ரஜினிக்கு முழுத் திருப்தி இல்லையாம். வியாபார அம்சங்களோடு கலந்த மாஸ் படம் நடிக்கவேண்டும் என்கிற ரஜினியின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிற கதையாக அது இல்லையாம்.இன்னொரு ரஞ்சித் படம் போல் ஆகிவிடக்கூடாது என்று நினைத்த ரஜினி அந்தக்கதையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டாராம்.

அதோடு அப்பட அறிவிப்பைப் பெரிய அளவில் செய்யவேண்டும் என்பதற்காக கமல் ரஜினி ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிடவேண்டாம் என்று ரஜினி சொல்லிவிட்டாராம்.இதனால் செய்வதறியாது திகைத்து நிற்கிறாராம் கமல்.

அப்படியானால் அது அவ்வளவுதானா?

அப்படிச் சொல்லமுடியாது ஒரு வாய்ப்பு இருக்கிறது,விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் வெளியாகி அதற்குப் பெரிய வரவேற்பு கிடைத்தால் ஒருவேளை லோகேஷ் கனகராஜ் கதையை ரஜினி ஒப்புக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதென்கிறார்கள்.

என்ன நடக்கிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts