October 25, 2021
சினிமா செய்திகள்

இன்று முதல் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு – பிஎஸ் 1 நிறைவடைகிறது

கார்த்தி, விக்ரம்,ஜெயம்ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் பொன்னியின்செல்வன் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டன என்றாலும் படத்தின் தொடக்கத்தில் இடம்பெறவிருக்கும் பாடல் ஒன்று எடுக்கவேண்டியிருக்கிறதாம்.

இதற்காக, பொள்ளாச்சி பகுதிகளில் மூன்று நாட்களும் அதன்பின் மைசூர் பகுதிகளில் இரண்டு நாட்களும் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டாராம் மணிரத்னம்.

ஆனால், கடைசி நேரத்தில் அப்படப்பிடிப்பை இரத்து செய்துவிட்டார் மணிரத்னம்.

இதனால் அப்பாடல் படமாக்கப்படுமா? என்கிற ஐயம் படக்குழுவினருக்கே இருந்தது.

இந்நிலையில், இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் மைசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அப்பாடல் காட்சியைப் படமாக்கவிருக்கிறார்களாம்.

இதற்காக பொள்ளாச்சியிலிருந்து சென்னை திரும்பிய அனைவரும் மைசூர் புறப்பட்டுச் சென்றுள்ளனராம்.

இப்பாடல் காட்சியில் கார்த்தி முதன்மையாக இருப்பார் என்றும் அவருடைய தேதிகளையொட்டியே இப்பாடல் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.

எப்படியோ நல்லபடியாக நடந்தால் சரி.

Related Posts