November 25, 2020
சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – கலைப்புலி தாணு பின்வாங்கியது ஏன்?

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.

இந்தத் தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் முரளி இராமசாமி தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன.

இவ்விரு அணிகள் தவிர சுயேச்சையாகச் சிலர் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலில் முன்னாள் தலைவர் கலைப்புலி தாணு தலைமையில் ஒரு அணி போட்டியிடும் என்று கடைசிவரை எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்படி நடக்கவில்லை. அதற்கு என்ன காரணம்?

இதுதொடர்பாக உலவும் தகவல் இதுதான்…

கலைப்புலி தாணு மீது நிறைய அதிருப்திகள் இருக்கின்றன என்பதால் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதில்லை என்பதில் முதலிருந்தே தெளிவாக இருந்தாராம்.

அதேசமயம், ஒரு அணியை உருவாக்கி அதில் பொருளாளர் பொறுப்புக்குப் போட்டியிட நினைத்திருந்தாராம்.

அவர் அமைக்கவிருந்த அணியில் தலைவர் பதவிக்குப் போட்டியிட கமீலா நாசரைக் கேட்டாராம் கலைப்புலிதாணு. எவ்வளவோ வற்புறுத்தியும் கமீலா நாசர் தலைவர் பதவிக்குப் போட்டியிட மறுத்துவிட்டாராம்.

கமீலா நாசர் ஒப்புக்கொள்ளாத காரணத்தால் ஒரு முழுமையான அணி அமைக்க முடியவில்லையாம்.அதனால் அந்த அணியில் போட்டியிடுவதாக இருந்த சுபாஷ்சந்திரபோஸ், சந்திரபிரகாஷ்ஜெயின் போன்றோர் அணி மாறிப் போய்விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்தக் காரணங்களாலேயே கலைப்புலி தாணு எந்தப் பொறுப்புக்கும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார் என்கிறார்கள்.

Related Posts