சினிமா செய்திகள்

பிரின்ஸ் பட வெளியீட்டுத் தேதி மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் இப்போது, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.எஸ்கே 20 என்று சொல்லித் தொடங்கப்பட்ட இந்தப்படத்துக்கு பிரின்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது.இந்தப் படத்தினை தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ஜதிரத்னலு பட இயக்குநர் அனுதீப் இயக்குகிறார்.இந்தப் படத்தில் மரியா என்கிற உக்ரைன் நடிகை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கியது.சத்யராஜ் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்தப் படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.

இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளீயீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் கைப்பற்றியுள்ளார்.

இந்தப்படத்துக்குப் பெயர் வைக்குமுன்பே படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துவிட்டார்கள்.

அறிவித்தபின்பு அந்தத் தேதியில் மாற்றம் வரலாம் என்று சொல்லப்பட்டது.

இவ்வாண்டு அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி வருகிறது. அதையொட்டி அஜீத் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டுவந்தது. இப்போது அதில் திடீர் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாகவும் தீபாவளிக்கு அஜீத் படம் வராதென்றும் சொல்லப்படுகிறது.

அதனால் இப்போதைக்கு தீபாவளிநாளில் கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் மட்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அஜீத் படம் வராததால் பிரின்ஸ் படத்தையும் தீபாவளியன்று வெளியிடலாம் என ஆசைப்படுகிறார்களாம். படம் கொண்டாட்டமான படமாக இருக்கும் என்பதால் பெரிய பண்டிகை நாளன்று வெளியாவது இன்னும் மகிழ்ச்சியாகவும் வியாபாரரீதியாக நல்ல பலனையும் கொடுக்கும் என்பது சிவகார்த்திகேயனின் எண்ணமாம்.

அவருடைய விருப்பப்படியே வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

இந்தப் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

Related Posts