செய்திக் குறிப்புகள்

சீனாவில் சண்டை போட்ட பிரபுதேவா

எம்.எஸ்.அர்ஜூன் என்பவர் இயக்கத்தில், பிரபுதேவா கதாநாயகனாகவும் லட்சுமிமேனன் நடிக்கும் படம் எங் மங் சங்.

மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ராலட்சுமனன், கும்கி அஸ்வின் காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார்.

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ்.சிவராமன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு ஆர்.பி.குருதேவ், படத்தொகுப்பு பாசில் – நிரஞ்சன்,பாடல்கள் பிரபுதேவா மு.ரவிகுமார்,இசை அம்ரீஷ்,நடனம் ஸ்ரீதர்,நோபல், சண்டைப் பயிற்சி சில்வா

இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், பொள்ளாச்சி ஆகிய இடங்களைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் நடத்தி முடித்தார்கள்.

அதைத் தொடர்ந்து சீனாவில் டெங் லெங் என்ற இடத்தில் ஏராளமான செலவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தினார்கள்.

பிரபுதேவா வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சிகளை சில்வா அமைக்க படமாக்கப்பட்டது.

குங்பூ மற்றும் சைனீஸ் ஸ்டண்ட் பற்றிய காட்சிகள் கொண்ட படம் என்பதால் அதிக சிரத்தை எடுத்து படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

1980 காலகட்டத்தில் நடப்பது மாதிரியான கதைக்களத்தைக் கொண்ட படமாக எங் மங் சங் உருவாகிக் கொண்டிருக்கிறது.

பிரபுதேவா இந்தப்படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கிறாராம்.

Related Posts