அஜித் போல ரஜினியும் – பேட்ட முன்னோட்ட சுவாரசியம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் முன்னோட்டம் இன்று காலை வெளியானது.
படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் வில்லன்களாகவும், சிம்ரன், திரிஷா ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். சசிகுமார் ரஜினியின் நண்பராகவும், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனத் ரெட்டி கல்லூரி மாணவர்களாகவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தணிக்கைக் குழுவில் இந்தப்படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதன் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. படத்தின் டிரெய்லரை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இன்று வெளியாகும் என்று பட நிறுவனம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை 10.25-க்கு டிரெய்லர் வெளியானது.
இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஏற்கனவே ரஜினியின் தோற்றங்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. அதில் இளமையாக இருந்தார். வேட்டி சட்டையிலும் ஒரு தோற்றம் இருந்தது.
முன்னோட்டம் ஆரம்பத்திலேயே காளி என்ற ஹாஸ்டல் வார்டனை பற்றி ஒரு கேங் பேசுகின்றது.
சிம்ரனுடன் ரொமான்ஸ், இளைஞர்களுடன் ஆட்டம், பாட்டம்,
ஏய் எவனுக்காவது பொண்டாட்டி, புள்ள குட்டி என்ற செண்டிமென்ட் இருந்தா அப்படியே ஓடிபோய்டு. செம காண்டுல இருக்கேன், மவனே கொல்லாம விட மாட்டேன் என்று ரஜினி பேசும் வசனம் இடம்பெறுகிறது.
‘சத்தியமா சொல்றேன், அடிச்சு அண்டர்வேர அவுத்துவிட்ருவேன், அப்புறம் மானம் போச்சுன்னு சொல்லக்கூடாது’ என்ற வசனங்களுடன் டிரெய்லர் உள்ளது.
பார்க்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த, ஸ்டைலா இருக்கேனா நேச்சுரலி, சிறப்பான, தரமான சம்பவங்கள இனிமேல் தான் பாக்க போற… என ரஜினி பேசும் மாஸான பஞ்ச் வசனங்களுக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதிலும் மதுரை பின்னணியில் ரஜினி ஆடிக்கொண்டே வரும் கடைசி காட்சி , கண்டிப்பாக நீண்ட நாள் காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு விருந்து தான்.
இதைப் பார்த்த பலரும் விஸ்வாசம் அஜித் போல ரஜினியும் மதுரைக்கு வந்துவிட்டார் என்று சொல்லிவருகிறார்கள்.