சினிமா செய்திகள் நடிகை

பிக்பாஸ் 2 வெற்றியாளரை அடையாளம் காட்டினாரா ஓவியா? – புதிய பரபரப்பு

பிக்பாஸ் சீசன் 2 தற்போது நடந்து வருகிறது. 80 நாட்களை கடந்து நடக்கும் இந்நிகழ்ச்சி பார்வையாளர்களின் அமோக ஆதரவை பெற்ற நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியை கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பேர் பங்கேற்ற போட்டியில் தற்போது 8 பேர் மிஞ்சியுள்ளனர். நடிகைகள் மும்தாஜ், விஜயலட்சுமி, ஐஸ்வர்யா, ஜனனி ஐயர், ரித்விகா, யாஷிகா, தாடி பாலாஜி உட்பட 7 பேர் மட்டுமே மிஞ்சியுள்ளனர்.

இவர்களில் இறுதி வெற்றியாளர் போட்டியில் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் 1 இல் புகழ்பெற்ற ஓவியா, ஐஸ்வர்யாதத்தா என்கிற பெயரை மட்டும் ட்வீட் செய்திருக்கிறார்.

அது எதற்காக? என்பது பற்றி அவர் எந்த விளக்கமும் சொல்லவில்லை. ஆனால் அதில் கருத்துத் தெரிவித்துள்ள பலரும் பிக்பாஸ் 2 இன் வெற்றியாளராக ஐஸ்வர்யாதான் இருப்பார் என்பதையே ஓவியா சொல்லியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இது சரியா? தவறா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Related Posts