September 23, 2020
சினிமா செய்திகள்

விஜய் 65 படம் குறித்துப் பரவும் செய்தி

நடிகர் விஜய் இப்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில், விஜய்யுடன், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. அண்மையில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்நிலையில் இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படம் பற்றிய புதிய செய்தி ஒன்று வேகமாகப் பரவிவருகிறது.

விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் ஒரு செய்தி வேகமாகப் பரவி வருகிறது .

இதை விஜய்யின் மானேஜர் ஜெகதீஷ் என்பவர் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதேசமயம் இதில் உண்மையில்லை விஜய்யின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் குறித்தும் இயக்குநர் குறித்தும் இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் சொல்கிறார்கள்.

Related Posts