சினிமா செய்திகள்

கார்த்திக்கு ஆதரவு விஷாலுக்கு எதிர்ப்பு – ஆர்.கே.சுரேஷ் அதிரடி

மஞ்சித் திவாகர் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் கொச்சின் ஷாதி அட் சென்னை 03.

மலையாளம், தமிழ் ஆகிய இருமொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று மாலை நடந்தது.

அதில் நாயகன் ஆர்.கே.சுரேஷ் கலந்துகொண்டார். அப்போது படம் குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொண்ட அவர், நடிகர் சங்கத் தேர்தல் குறித்தும் பேசினார்.

நடிகர் சங்கத் தேர்தல் விசயத்தில் மறைந்த் அண்ணன் ஜே.கே.ரித்தீஷின் ஆன்மா சாந்தியடைய வேண்டும். அதற்காக அவர் முன்னெடுத்த விசயங்களை நான் செய்வேன்.

எங்களைப் பொறுத்தவரை கார்த்தி, நாசர் ஆகியோர் நின்றால் அவர்களை எதிர்க்கமாட்டோம். விஷால் நின்றால் நிச்சயம் எதிர்ப்போம்.

விஷால் தன்னுடைய தேவைக்கேற்ப அனைவரையும் பயன்படுத்திக் கொண்டு அதன்பின் கழற்றி விட்டுவிடுகிறார்.

என்னுடைய பில்லாபாண்டி படம் தமிழக வசூல் ஒருகோடியைத் தாண்டி வந்திருக்கிறது. வெளிநாட்டு உரிமை தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகிய எல்லாமே நன்றாகப் போயிருக்கிறது. அப்படியிருக்கும்போது அந்தப்படம் சரியில்லை என்று விஷால் பேட்டி கொடுத்தது வேதனையாக இருந்தது.

அவர் ஏன் இப்படி ஆனார் என்றே தெரியவில்லை

இவ்வாறு ஆர்.கே.சுரேஷ் கூறினார்.

இப்போது நடிகர் சங்கத்தலைவராக நாசரும் செயலாளராக விஷாலும் பொருளாளராக கார்த்தியும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts