Uncategorized சினிமா செய்திகள்

துப்பறிவாளன் 2 சர்ச்சை – மிஷ்கின் அறிக்கை

விஷால் தயாரித்து நடிக்கும் துப்பறிவாளன் 2 படம் குறித்த சர்ச்சைகள் வெளியாகியிருக்கும் நிலையில் இயக்குநர் மிஷ்கின் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது…..

சைக்கோ மாபெரும் வெற்றி என்று கூறுவதை விட “அளவில்லாத அன்பு” என்றே கூறுவேன். படத்தைப் பார்த்த மக்கள் எடுத்துச் சென்றதும், கொடுத்ததும் அதுதான். எந்த வகை ஜானராக இருக்கட்டும், எந்த வகைப் பின்புலத்தில் கதை சொன்னாலும், பார்க்கும் பார்வையாளன் உணர்வுப்பூர்வமாக உணர்ந்தால் மட்டுமே, அதனைக் கொண்டாடுவான்.

நான் இந்தப்படங்களை கண்மூடித்தனமான நம்பிக்கையில் தான் உருவாக்கினேன். ஆனால் இறுதியில் அளவிலா அன்பைப் பெற்றிருக்கிறேன். “கண்மூடித்தனாமான நம்பிக்கை, ஆத்மாவின் தேடல்” இரண்டும் தான் வாழ்வின் உள்ளார்ந்த அர்த்தம் என்பதை நம்புவன் நான்.

உண்மை என்னவெனில் எனது “பிசாசு” நாயகன் சித்தார்த், “துப்பறிவாளன்” கணியன் பூங்குன்றன், “சைக்கோ” கௌதம் அனைவரும் இந்த மந்திரத்தை நம்புபவர்களே. ரசிகர்கள் இதனை வாழ்வின் அன்பாக எடுத்துச் செல்ல வேண்டுமென்பதே என் விருப்பம்.

நான் வெகு பணிவுடன் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் பணிபுரிந்த நடிக நடிகையர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விமர்சகர்கள், என் வளர்ச்சியை விரும்பும் அன்பு உள்ளங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் எனக்கு தனித்துவ வெற்றி தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போல் அனைவரையும் மகிழ்விக்கும் திரைப்பயணத்தை தொடர விரும்புகிறேன். மிக விரைவில் எனது அடுத்த பயணம் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறேன் நன்றி.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

அண்மையில் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து அவர் விலகினார் என்றும் விலக்கப்பட்டார் என்றும் செய்திகள் வெளியான நிலையில் மிஷ்கினின் அடுத்த பயணம் என்கிற அறிவிப்பால் துப்பறிவாளன் 2 படத்தில் அவர் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

Related Posts