சினிமா செய்திகள்

எகிறும் எதிர்பார்ப்புடன் மைக்கேல் ஜாக்சன் பயோபிக்… காரணம், கிரஹாம் கிங் தான்!

இசையினாலும், நடன அசைவுகளாலும் ரசிகர்களைக் கட்டிப் போட்ட பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன். இவரின் வாழ்க்கையை திரைப்படமாக்கி வருகிறது ஹாலிவுட் சினிமா.

பாடல் எழுதுவது, இசையமைப்பது, பாடுவது அதற்கேற்ப நடனங்களால் ரசிகர்களை கவர்வது என மைக்கேல் ஜாக்சன் பல்முகத் தன்மை கொண்டவர். எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் சேர்ந்ததோ, அதற்கு இணையான சர்ச்சைகளும் இவரை சூழந்தது. மைக்கேல் ஜாக்சனின் முழுமையான பயோபிக்காக உருவாக இருக்காம் திரைப்படம்.

மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் எடுக்கும் உரிமையை பெற்றிருக்கிறார், பிரபல தயாரிப்பாளரும், கடந்த வருடம் ஆஸ்கர் விருது வென்ற பொஹிமியன் ராப்சோடி பட தயாரிப்பாளருமான கிரஹாம் கிங். மைக்கேல் ஜாக்சனின் அனைத்து இசை ஆல்பங்களையும் படத்தில் பயன்படுத்தும் உரிமையும் சேர்த்துப் பெற்றிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

ஆஸ்கர் வென்ற பொஹிமியன் ராப்சோடி

பொஹிமியன் ராப்சோடி படமும் குயின் என்கிற பிரபல இசைக்குழுவின் வாழ்க்கை வரலாறு தான். அந்த வரிசையில் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார் கிரஹாம். இந்தப் படத்துக்கு ஜான் லோகன் திரைக்கதை எழுதுகிறார். மைக்கேல் ஜாக்சனாக யார் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் விரைவில் வெளியாக இருக்கிறது. ஆஸ்கர் வென்ற தரமான படங்களைத் தந்த தயாரிப்பாளர் கையில், மைக்கேல் ஜாக்சன் பயோபிக் இருப்பதால் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

Related Posts