December 8, 2019
செய்திக் குறிப்புகள்

கல்லூரி விடுதிகளின் இன்னொரு முகம் காட்டும் படம் – மயூரன் இயக்குநர் பெருமிதம்

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நந்தன் சுப்பராயன் எழுதி இயக்கியிருக்கும் படம் மயூரன். மயூரன் என்றால் விரைந்து உன்னைக் காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.

Parameswar Nansan Subbarayan

Parameswar Nansan Subbarayan

ஒரு கல்லூரி விடுதியைக் கதைக்களமாகக் கொண்ட படம். கல்லூரி விடுதியில் நடக்கும் சட்டத்திற்கு புறம்பான செயல்களையும் அதன் நிழல் உலகத்தையும் சொல்லும் விதமாக அமைந்துள்ளது.

சிதம்பரம் நகரில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்க வரும் மாணவன் ஒரு நள்ளிரவில் காணாமல் போகிறான், அவனைத் தேடிப் போகையில் அவனது நண்பனுக்கு ஏற்படும் ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும் தான் இந்தப் படம்.

ஆனந்த் சாமி (லென்ஸ் பட நாயகன்) அமுதவாணன், அஸ்மிதா, பாலாஜி ராதாகிருஷ்ணன், சிவா, மற்றும் கலை ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சாஷி என்பவர் நடித்துள்ளார்.இவர் ஜார்கண்டைசேர்ந்தவர். எழுத்தாளர் வேல ராமமூர்த்தி மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் கே.அசோக்குமார் பி.ராமன், ஜி.சந்திரசேகரன்,எம்.பி.கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு பரமேஷ்வர் (இவர் சந்தோஷ்சிவனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்)இசை ஜுபின்
(பழையவண்ணாரப்பேட்டை) மற்றும் ஜெரார்ட் ஆகிய இருவரும்,பாடல்கள் குகை மா.புகழேந்தி,படத்தொகுப்பு அஸ்வின்,
சண்டைப்பயிற்சி டான்அசோக்,நடனம் ஜாய்மதி.

கல்லூரி விடுதிகளின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிற புதிய கதைக்களம் என்பதால் கவனிக்கத் தக்க படமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Posts