Uncategorized

உச்சம் தொட்ட மாஸ்டர் வியாபாரம் – மொத்த தொகை விவரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, வி.ஜே.ரம்யா, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 70% வரை முடிந்துவிட்டது. ஷிமோகா படப்பிடிப்பைத் தொடர்ந்து, சென்னையில் தற்போது மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அதற்குள் படத்தின் ஒட்டுமொத்த வியாபாரத்தையும் முடித்துவிட்டனர்.

மேலும், இப்போதே தமிழக விநியோகஸ்தர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

எவ்வளவு தொகை என்பதை அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் விற்பனை செய்திருக்கும் தொகை விவரம்…

திருநெல்வேலி, கன்னியாகுமரி – ஸ்ரீ சாய் கம்பைன்ஸ் – 4.75 கோடி + ஜிஎஸ்டி+ மெட்டீரியல்

மதுரை – சுஷ்மா சினி ஆர்ட்ஸ் – 10.50 கோடி + ஜிஎஸ்டி + மெட்டீரியல்

திருச்சி, தஞ்சாவூர் – ப்ளஸ் மேக்ஸ் பிலிம்ஸ் – 7.50 கோடி + ஜிஎஸ்டி + மெட்டீரியல்

சேலம் – ஸ்ரீ ராஜ் பிலிம்ஸ் – 6 கோடி + ஜிஎஸ்டி + மெட்டீரியல்

கோயம்புத்தூர் – கந்தசாமி சினி ஆர்ட்ஸ் – 12.75 கோடி + ஜிஎஸ்டி+ மெட்டீரியல்

வட ஆற்காடு, தென் ஆற்காடு – 5 ஸ்டார் செந்தில் – 9 கோடி + ஜிஎஸ்டி +மெட்டீரியல்

செங்கல்பட்டு – தனம் பிக்சர்ஸ் – 15 கோடி + ஜிஎஸ்டி + மெட்டீரியல்

சென்னை – ஸ்ரீ கற்பக விநாயகா பிலிம்ஸ் சர்க்யூட்ஸ் – 6 கோடி + ஜிஎஸ்டி+ மெட்டீரியல்

மொத்தம் 71.50 கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறது. இந்தத் தொகைக்கு ஜிஎஸ்டி வரி வகையில் சுமார் எட்டரை கோடி என்றும், ஒவ்வொரு பகுதியிலும் போடப்படும் திரையரங்குகளின் எண்ணிக்கைக்கேற்ப மெட்டீரியல் செலவு இருக்குமென்றும் சொல்கிறார்கள்.

இவற்றையெல்லாம் சேர்த்துப்பார்த்தால் மொத்தத் தொகை பெரிதாக இருக்கிறது.

இது தமிழ்த்திரையுலகின் உச்சபட்ச வியாபாரம் என்றும் சொல்கிறார்கள்.

மிக எளிதாகச் சொல்லவேண்டுமென்றால் ரஜினி பட வியாபாரத்தை மிஞ்சியிருக்கிறது விஜய் பட வியாபாரம்.

Related Posts