October 29, 2020
சினிமா செய்திகள்

என் படத்தைக் காப்பியடித்துவிட்டார்கள் – மணிரத்னம் கார்த்திக்சுப்புராஜ் மீது குற்றச்சாட்டு

மணிரத்னம் தயாரிப்பில் சுகாசினி, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இயக்கிய ஐந்து குறும்படங்களை இணைத்து ஆந்தலாஜி வகைப் படமாக புத்தம்புதுக்காலை என்கிற படத்தை இணையத்தில் வெளீயிட்டிருக்கிறார்கள்.

இப்படங்களில் கெளதம், சுகாசினி,சுதா கொங்கரா ஆகியோரின் படங்கள் ஏற்கெனவே வெளியான படங்களின் தழுவல் என்கிற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள மிராக்கிள் படம் இயக்குநர் அஜயன்பாலா இயக்கிய குறும்படத்தை அப்படியே காப்பிய்டித்து எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இதுகுறித்து இயக்குநர் அஜயன்பாலா வெளியிட்டுள்ள பதிவில்…

நேற்று நண்பர் இலங்கைவேந்தன் போன் செய்து உடனே அமோசானில் புத்தம் புதுக்காலை படம் பாருங்க என பதட்டத்துடன் சொன்னார். என்ன எனக் கேட்டபோது அவர் சொன்ன தகவல் ஷாக்கா இருந்தது. அதில் கடைசியாக வரும் மிராக்கிள் படம் அப்படியே நான் நடிக நிலம் நடிப்புப் பயிற்சி மாணவர்களுக்காக கடந்த வருட இறுதியில் உருவாக்கி கொரானா வால் ிபோஸ்ட் ப்ரொட்க்‌ஷன் தாமதமாகி கடந்த மாதம் யூ ட்யூபில் வெளியானது என் சச்சின் கிரிக்கட் கிளப் குறும்படம்.

இதன் கதையை அப்படியே சுட்டுவிட்டார்கள் என்றார் அவர். நானும் இரவே பார்த்தேன். என் கதையில் பத்து பேர் அவர்கள் கதையில் இரண்டு பேர் கதைக்களம் பகல் அதில் இரவு மத்தபடி பேராசை பெருநட்டம் எனும் என் கதைக்கருவும் பணத்தேவைக்க தவறு செய்யப்போய் இருக்கும் பணத்தை கோட்டை விடுவதுமான கதை அமைப்பும் இறுதியில் டம்மி பணம் எனும் கதையின் முக்கிய திருப்பம் க்ளைமாக்சாக அமைந்திருப்பதும் அப்படியே இருக்கிறது.

படத்தில் நடித்துள்ள பாபி சிம்ஹா என் நட்பு வட்டத்தில் இருப்பவர். பன்னிரண்டு வருடமாய் நன்கு பழகியவர். இதை சட்டப் பூர்வமாய் எதிர்கொள்ள வழி இருக்கிறதா தெரியவில்லை . ஒரு ஷார்ட் பிலிமின் முக்கிய தகுதியே தனித்த ஐடியா தான். இருவது வருடமாய் போராடி படம் இயக்க முடியவில்லை சரி ஒரு ஷார்ட்பிலிமாவது எடுக்கலாம் என்று பார்த்தால் அதையும் உல்டா அடித்து ஓடிடிக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் அளவுக்கு தமிழில் கதை பஞ்சமா ? எத்தனைசிறுகதைகள் கொட்டிகிடக்கிறது எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஏன் ஒரு எழுத்தாளனின் கதையை் பயன் படுத்தும் எண்ணம் வருவதில்லை. சினிமாவுக்கு ஆரோக்கியமானதல்ல. சரி சுட்டார்களே ஒழுங்காகவாவது திரைக்கதை அமைத்தார்களா அதுவும் இல்லை. ஒரு டயரை திருடப்போகும் வீட்டிலும் சுமந்து செல்லும் லாஜிக் இல்லாத மொக்கை காட்சியெல்லாம் ஒரிஜினலாக சிந்திக்கும் படத்தில் வரவே வராது

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Related Posts