சினிமா செய்திகள்

மாவீரன் படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் மாவீரன்.அந்தப்படத்தை மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்குகிறார்.விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்கிறார். பரத்சங்கர் இசையமைக்கிறார். பிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது.

அதேநேரம் படத்தின் நாயகி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. அதன்படி மாவீரன் படத்தில் நாயகியாக இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். தற்போது விருமன் படத்தில் கார்த்தியுடன் நடித்திருக்கும் அவருக்கு இது இரண்டாவதுபடம் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் நாயகி குறித்த அறிவிப்போடு இந்தப் படத்தில் நடிகை சரிதா,இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என்ற அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இவர்களில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும் சரிதா, சிவகார்த்திகேயனின் அம்மாவாக நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Related Posts