சினிமா செய்திகள்

மாவீரன் படப்பிடிப்பு எப்போது?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படம் தீபாவளி நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மாவீரன்.அந்தப்படத்தை மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்குகிறார்.விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்கிறார். பரத்சங்கர் இசையமைக்கிறார். பிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.

தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் தயாராகவுள்ள இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 15,2022 அன்று காலை பத்தரை மணியளவில் வெளியானது.

சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் சிக்கல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது.

ஆனால், அப்படி எதுவும் இல்லை, சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.

ஆடிப்பெருக்கு நாளில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருக்கிறது. சென்னை தீவுத்திடல் அருகே தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுமெனச் சொல்கிறார்கள்.

சிவகார்த்திகேயனின் திரையுலகப் பயணத்தில் அவரை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் படமாக மாவீரன் படம் இருக்கும் என்று அப்படக்குழுவினர் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

Related Posts