September 18, 2020
சினிமா செய்திகள்

சொதப்பிய கஸ்தூரி கடுப்படித்த கார்த்தி – பாடல்விழாவில் பரபரப்பு

கே.சி.சுந்தரம் என்பவரது இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜூலை காற்றில்’. இப்படத்துக்கு ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் இன்று காலை (மார்ச் 4,2019) நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் கார்த்தி இருவரும் கலந்து கொண்டார்கள். இவ்விழாவை கஸ்தூரி தொகுத்து வழங்கினார்.

கலகலப்பாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த கஸ்தூரி, கார்த்தியைப் பேச அழைக்கும் போது சொதப்பினார். கைபேசியைக் கையில் எடுத்துக் கொண்டு “இங்கு வாங்களேன்.. நம்ம ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.

கார்த்தியும் சிரித்தபடி வந்தார். அப்போது “உங்க அப்பா இல்லை. ஆகையால் அவசரமாக ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம்” என்றார். இதனால் கார்த்தி கடுப்பானார்.

அதோடு பேசத் தொடங்கும்போதே, இது தேவையில்லாத ஒரு விஷயமாக இருக்கிறது” என்று முகத்தை திருப்பிக் கொண்டு பேசத் தொடங்கினார்.

அப்போது கார்த்தி “செல்ஃபி என்ற விஷயத்துக்கு, ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. கேட்டுவிட்டுப் புகைப்படம் எடுப்பது என்றில்லை. முகத்துக்கு முன்னால் கொண்டுவந்து கேமராவை நிறுத்துகிறார்கள்.

பின்னால் ஒரு ப்ளாஷ், முன்னால் ஒரு ப்ளாஷ் வைத்துக்கொண்டு கண்ணில் அடித்துக்கொண்டே இருந்தால் கண்ணில் சிக்கல் உள்ளவர் என்ன ஆவார்? ஒரு விவஸ்தையே கிடையாது என நினைக்கிறேன்.

போட்டோ எடுப்பதைக் கூட ஒரு மரியாதையாகக் கேட்டு எடுப்பது கூட தெரியாத அளவுக்கு ஆயிட்டோமா என்று வருத்தமாக இருக்கிறது. இப்படிச் சொன்னால் தான் உண்டு. வேறு எங்கும் சொல்ல முடியாது என்றார்.

இதை எதிர்பாராமல் அதிர்ச்சியடைந்த கஸ்தூரி, அதைச் சமாளிக்கத் தடுமாறினார். இதனால் நிகழ்ச்சியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Posts