சினிமா செய்திகள்

சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை வெளியீடு – கலைப்புலி எஸ்.தாணு அதிரடி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருக்கும் கர்ணன் படம் நாளை திரைக்கு வருகிறது. இப்படம் நாளை திரைக்கு வரவிருக்கும் நேரத்தில் கொரோனா பரவலைக் காரணம் காட்டி தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

ஏப்ரல் 10 முதல் 30 வரையிலான அக்கட்டுப்பாடுகளில் திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே நிரப்பப்படவேண்டும் என்கிற கட்டுப்பாடும் உள்ளது.

இதனால், கர்ணன் பட வெளியீடு தள்ளிப்போகும் என்று சிலர் பேசத் தொடங்கினார்கள்.

அதற்கு உடனே முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அவருடைய இந்த அறிவிப்பை தனுஷ் இரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

ஏற்கெனவே 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்கிற விதி இருந்தபோதுதான் விஜய் நடித்த மாஸ்டர் வெளியாகி மாபெரும் வசூலைக் குவித்தது.

இப்படமும் அது போல வசூலைக்குவிக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

Related Posts