சினிமா செய்திகள்

நல்லா இல்லையென்றாலும் 40 கோடி – காஞ்சனா 3 ஆச்சரியம்

ஏப்ரல் 19 அன்று ‘காஞ்சனா 3’ படம் வெளியானது. இந்தப் படம்
கோடை விடுமுறை நாளில் வெளியானதால் மக்கள் கூட்டம் அலை மோதியது.
.
ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கியுள்ள இந்தப்படம், ஒரே மாதிரியான பேய்க் கதை,பழைய நகைச்சுவைகள் என்று கிண்டலுக்கு ஆளானது.

ஆனாலும் அவற்றைத் தாண்டி படத்தின் வசூல் பெரிதாக இருக்கிறது.

இரண்டு வாரங்களைக் கடந்த நிலையில் இப்படத்தின் வசூலில் தயாரிப்பாளரின் பங்கு இதுவரை சுமார் நாற்பது கோடி என்கிறார்கள்.

இந்த அளவு வசூல் ரஜினி, விஜய், அஜீத் போன்ற பெரிய நடிகர்களுக்கு அதுவும் படம் நன்றாக இருக்கிறது என்றால் மட்டுமே நடக்கும் என்கிறார்கள்.

ஆனால் படம் சரியில்லை என்ற போதும் இவ்வளவு வசூல் என்பது முன்னணி நடிகர்களையும் திரையுலகினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts