சினிமா செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தல் – கமல் ரஜினி மோதல்

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த பின் நடிகர் பாக்யராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சவுகிதார் எனக்கூறி மோடி தேர்தலை சந்தித்தது போல நாங்களும் நடிகர் சங்கத்தை பாதுகாக்க வந்துள்ளோம். நடிகர் சங்க தேர்தலில் எங்கள் (பாக்யராஜ்) அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்தை உருவாக்கியவர் சுவாமி சங்கரதாஸ் என்பதால் அணிக்கு அவர் பெயர் வைத்துள்ளோம். நடிகர் சங்க தேர்தலில் பொருளாளர் பதவிக்கு நடிகர் கார்த்தியை எதிர்த்து நடிகர் பிரசாந்த் போட்டியிடுகிறார்.

நடிகர் சங்க கட்டட பணிக்கு நிதி தேவைப்படுகிறது. இவர்களிடம் என்ன திட்டம் உள்ளது. நடிகர் சங்க கட்டட பணி விரைந்து முடிய வேண்டும் என்பதே ரஜினி, கமலின் விருப்பம்.

நடிகர் சங்க கட்டட பணியில் தொய்வு ஏற்பட்ட போதெல்லாம் ஐசரி கணேஷ் பண உதவி செய்துள்ளார். நான் தலைவரானால் நன்றாக இருக்கும் என்று ரஜினி சொன்னார். நடிகர் சங்க தேர்தலில் சவுகிதாராக களமிறங்குகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்னொரு பக்கம் பாண்டவர் அணி சார்பில் நடிகர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நாசருக்கு முன்மொழிந்து வாழ்த்தியிருக்கிறார் கமல்ஹாசன்.

இதன்மூலம் கமல் ரஜினி ஆகிய இருவரும் ஆளுக்கு ஒரு அணியை ஆதரிக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது என்கிற கருத்துகள் வருகின்றன.

Related Posts