சினிமா செய்திகள்

ரஜினி விழாவில் கமல் பற்றி சர்ச்சை – லாரன்ஸ் பிடிவாதம்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று(டிச.,7) சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் , நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசினார் .

அவர்,ரஜினி படம் வெளியாகும் நேரத்தில், போஸ்டர் ஒட்ட சண்டை போட்டிருக்கிறேன். இங்க சொல்றதுல தப்பில்லை. கமல் சார் போஸ்டர் ஒட்டினால் அதுல போய் சாணி அடிப்பேன். அப்போ வந்து மனநிலைமை அப்படி இருந்தது. இப்ப பார்க்கும் போதுதான் தெரியுது, அவங்க ரெண்டு பேரும் அவ்வளவு குளோஸுன்னு. ரெண்டு பேரும் கை பிடிச்சி நடக்கும் போதெல்லாம் வேற ஏதோ நடக்கப் போகுதுன்னு தோணுது. அவ்வளவு தீவிரமான ரசிகனா இருந்த என்னை இப்ப முதல் வரிசைல உட்கார வச்சி அழகு பார்க்கற ஒரே மனுஷன் சூப்பர் ஸ்டார்தான் என்றார்.

லாரன்ஸின் இந்தப் பேச்சுக்கு கமல் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் .

இதனால் நள்ளிரவில் ராகவா லாரன்ஸ் அதற்கு ஒரு விளக்கமளித்துள்ளார்.

அதில், “தர்பார் இசை வெளியீட்டு விழாவில் நான் பேசிய பிறகு, கமல் சார் போஸ்டர் மீது நான் சாணி அடித்தது பற்றி பேசிய பேச்சு மட்டும் ஹைலைட் செய்யப்படுகிறது. நான் சிறு வயதில் தலைவரின் தீவிர ரசிகனாக இருந்த போது கமல் சார் பற்றித் தெரியாமல் செய்த விஷயம் அது.

கமல் சார் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் எப்போதாவது தவறாகப் பேசியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்பேன்.

ஆனால், இங்கு நான் எதுவும் தவறாகப் பேசவில்லை. முழு வீடியோவைப் பார்த்தால் உங்களக்குப் புரியும். சிலர் இதை டிவிஸ்ட் செய்கிறார்கள். என் மனதில் கமல் சாருக்கு எவ்வளவு மரியாதை என்பது எனக்குத் தெரியும். அதை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் இந்த வீடியோவைப் பாருங்கள்

என்று சொல்லிவிட்டு, அவர் பேசிய பேச்சின் காணொலியைப் பதிவிட்டுள்ளார்.

ஆனாலும் கமல் ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை, போஸ்டரில் சாணி அடிப்பேன் என பேசிவிட்டு அதில் தப்பில்லை என்றும் சொல்வதா? என மேலும் கோபமாகியிருக்கிறார்கள் கமல் ரசிகர்கள்.

Related Posts