September 18, 2020
சினிமா செய்திகள்

கமல் நடிக்கும் 232 ஆவது படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சந்தீப்கிஷன் நடித்த மாநகரம், கார்த்தி நடித்த கைதி ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூன்றாவதாக விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

அப்படம் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. கொரோனா சிக்கல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் அப்படம் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்துக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை இயக்கப்போகிறார் என்றும் அப்படத்தைக் கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார் என்றும் செய்திகள் வருகின்றன.

இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில்,நான் இயக்கும் அடுத்த படம் பற்றிய நாளை வெளியிடுகிறேன் என்று நேற்று மாலை அறிவித்திருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு அவர் வெளீயிட்டுள்ள அறிவிப்பில், கமல் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். கமலின் 232 ஆவது படமென்று சொல்லப்பட்டுள்ள இப்படத்துக்கு தற்காலிகமாக எவனென்று நினைத்தாய் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts