சினிமா செய்திகள்

காலாவில் பாட்டெழுதிய அனுபவம் – மகிழ்வுடன் பகிரும் கபிலன்

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ரஜினியின் ‘காலா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கற்றவை பற்றவை’ பாடல் மிகவும் பேசப்படும் பாடல்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது.

இந்தப்பாடலை கபிலன் எழுதியுள்ளார். அது உருவான விதம் பற்றி அவர் கூறும்போது,

டீஸர் வெளியாவதற்கு 2 நாட்கள் முன்பு, டீஸரை கபிலனுக்குப் போட்டுக்காட்டிய இயக்குநர் பா.இரஞ்சித், இதற்கு ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டார். நான் எழுதிய கவிதைகளில் இந்தச் சூழலுக்குத் பொருத்தமானவற்றைச் சொன்னேன். அவற்றை அப்படியே பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார் இயக்குநர் பா.ரஞ்சித்.

வா உன்னையும் மண்ணையும் வென்றுவா
தீராத ஓர் தேவையை கொண்டுவா
நூறாயிரம் ஆண்டுகள் போதுமே
ஒன்றாகவே மாறுவாய் சீறுவாய்
கற்றவை பற்றவை

என்று நீளும் அந்தப் பாடலுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி.இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன், பாடலைப் பாடிய யோகி.பி ஆகியோரோடு என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறேன் என்கிறார் கபிலன்.

இந்தப்பாடலைக் கேட்டுவிட்டு சூப்பர் என்று பாராட்டியிருக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினி.

Related Posts