September 18, 2020
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைகிறார் ஜெயம்ரவி

டிக்டிக்டிக், அடங்கமறு, கோமாளி ஆகிய படங்களின் தொடர் வெற்றியால் தெம்பாக இருக்கிறார் ஜெயம்ரவி. அவர் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் பூமி. எல்லா வேலைகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறதாம் அப்படம்.

அதற்கடுத்து இயக்குநர் அகமது படம் உட்பட வரிசையாகச் சில படங்களில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஸ்கிரின்சீன் நிறுவனத்துக்கு மூன்று படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அவற்றோடு, இயக்குநர் அட்லி தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவும் அவர் ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இவற்றோடு இன்னும் ஒரு படம் சேர்ந்திருக்கிறதாம். மான்கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று பேச்சு வருகிறது.

இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பதாகச் சொல்லியிருக்கிறாராம். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றனவாம்.

எல்லாம் சரியாக அமைந்த பின் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

இயக்குநர் திருக்குமரன், ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். மான் கராத்தே படத்தை இயக்கியதற்குப் பிறகும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படங்களில் பணியாற்றிவருகிறார் அதன் காரணமாகவே ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப்படத்தைத் தயாரிக்க ஒப்புக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts