சினிமா செய்திகள்

டிவிக்கு வருகிறது ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுத் தொடர்

ஜெயலலிதா வாழ்க்கையை ‘குயின்’ என்ற பெயரில் இணையதளத் தொடராக வெளியானது.இயக்குநர் கவுதம் மேனன், பிரசாத் முருகேசன் ஆகியோர் இயக்கியிருந்தனர்.

இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.

இந்தி நடிகை சிமி அகர்வால் ரம்யாகிருஷ்ணனைப் பேட்டி எடுப்பதுபோல் கதை தொடங்கும். பிளாஷ்பேக்கில் சிறுவயதில் ஜெயலலிதா பள்ளியில் படித்த காட்சிகள், படிப்பின் மீது அவருக்கு இருந்த ஆர்வம், முதல் மாணவியாக தேர்ச்சி, வீட்டில் நிலவும் வறுமை என்று தொடரும்.

தாய் நிர்ப்பந்தத்தால் விருப்பம் இல்லாமல் திரைப்படங்களில் நடிப்பது, எம்.ஜி.ஆருடன் சந்திப்பு, திரையுலகில் நிகழ்த்திய சாதனைகள், அரசியல் பிரவேசம், எம்.ஜி.ஆர் மறைவு என்று அடுத்தடுத்த தொடர்களில் ஒரு திரைப்படத்தை பார்ப்பதுபோல் விறுவிறுப்பாகவும் பிரமாண்டமாகவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதில் ஜெயலலிதாவின் தாய் கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் வருகிறார். இளம் வயது ஜெயலலிதாவாக அஞ்சனா ஜெயபிரகாசும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் இந்திரஜித் சுகுமாரனும் நடித்திருந்தனர்.

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார், தர்புகா சிவாவின் பின்னணி இசை அமைத்திருந்தார்.

இந்த இணையத் தொடர் இணையதளத்தில் 2019 இறுதியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்போது அந்தத் தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறதாம். இதற்கான அனுமதியை ஜீ தமிழ் தொலைக்காட்சி பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இணையதளத் தொடராக நல்ல வரவேற்புப் பெற்ற இத்தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் போட்டி போட்டு இத்தொடரை ஜீ தமிழ் கைப்பற்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts