Uncategorized

தினமும் லீக் ஆகும் இந்தியன் 2 காட்சிகள் – படக்குழு அதிர்ச்சி

இந்தியன் 2 படப்பிடிப்பு சென்னை அருகிலுள்ள ஈவிபி திடலில் பெரிய பெரிய அரங்குகள் அமைத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
படத்தில் மிக முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதாம்.

வரலாற்றுக் காலகட்டத்தில் நடக்கும் காட்சிகள் என்பதால் ஏராளமான துணைநடிகர் நடிகைகளுடன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறதாம்.

நடிகர் நடிகைகள் சம்பளம் படப்பிடிப்பு அரங்கு வாடகை தொழில்நுட்பக் கருவிகள் ஆகியனவற்றைத் தாண்டி இப்படப்பிடிப்பில் அன்றாட செல்வு சுமார் ஒரு கோடிக்கு மேல் ஆகிறது என்கிறார்கள்.

பெரும் பொருட்செலவில் நடக்கும் இந்தப்படப்பிடிப்பில் இருந்து தினமும் சில புகைப்படங்களும் காணொலிக்காட்சிகளும் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

பெரும் செலவு கடும் கட்டுப்பாடுகள் ஆகியனவற்றைத் தாண்டி இந்தக்காட்சிகள் வெளியாவது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். 

இவற்றை வெளியிடுவது யார்? என்பதைக் கண்டுபிடித்துத் தண்டிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறதாம் படக்குழு.

Related Posts