November 16, 2019
சினிமா செய்திகள்

மீண்டும் தொடங்குகிறது இந்தியன் 2 – படக்குழு மகிழ்ச்சி

ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்த
படம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர்.

கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் அப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை அனிருத். இப்படத்தின் கடந்த நவம்பரில் தொடங்கி நான்கு நாட்கள் நடந்ததுடன் நிற்கிறது.

கமலுடைய ஒப்பனை தொடர்பான விசயங்கள் மற்றும் படத்தின் செலவு, வெளியீட்டுத்தேதி ஆகிய விசயங்களில் படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருந்தது.

இதனால் இந்தப்படம் நடக்காது என்றே நம்பப்பட்டது. அதை மெய்ப்பிக்கும் விதமாக இயக்குநர் ஷங்கர் வேறு நாயகர்களை வைத்துப் படமெடுக்க முயல்கிறார் என்கிற செய்திகள் வந்தன.

ஆனால் அவற்றையெல்லாம் பொய்யாக்கி மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம். அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன.

இந்தியன் 2 குறித்து வந்த செய்திகளால், பல மாதங்கள் உழைப்பு வீணாகிவிடுமோ என்கிற வருத்தத்தில் இருந்த படக்குழுவினர் இப்போது மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

Related Posts