சினிமா செய்திகள்

ஹாட் ஸ்டார் செயலியில் மாற்றம் – ரசிகர்கள் மகிழ்ச்சி சந்தாதாரர்கள் அதிர்ச்சி

2015 ஆம் ஆண்டு தொடங்கியது ஹாட் ஸ்டார் செயலி. திரைப்படங்கள், மட்டைப்பந்து விளையாட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எல்லாவற்றையும் தன் சந்தாதாரர்களுக்கு வழங்கிவந்தது.

பெரும்பாலான மேல்தட்டு இளைஞர்களின் அபிமான செயலியாகத் திகழ்ந்து வந்தது.

இதில் இப்போது பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் (ஏப்ரல் 3, 2020) நடைமுறைக்கு வந்துள்ள அந்த மாற்றத்தின்படி, இனிமேல் ஹாட் ஸ்டார், டிஸ்னி ஹாட் ஸ்டார் என்று பெயர் மாறுகிறது.

பெயர் மாற்றத்திற்கேற்ப இனி இந்திய அளவிலான படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளோடு உலகத் திரைப்படங்கள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் அந்தசெயலியில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஹாட் ஸ்டார் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதன்மூலம் இனி உலக அளவில் செயல்படும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்துக்குப் போட்டியாக இது உருவாகுமென்று சொல்லப்படுகிறது.

அதற்கேற்ப இச்செயலியின் கட்டணங்களும் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றவாம்.

இப்போது  சந்தாதாரர்களாக இருப்பவர்களுக்குக் கட்டணத்தில் மாற்றமில்லை, அவர்கள் புதுப்பிக்கும்போது புதிய கட்டணத்தில் புதுப்பித்தாக வேண்டும்.

அக்கட்டணம் பன்மடங்கு அதிகம் என்று சொல்லப்படுவதால் ஹாட் ஸ்டார் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts