September 18, 2021
சினிமா செய்திகள்

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படம் – விவரங்கள்

இசையமைப்பாளராக தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா ஆதி உடனே கதாநாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார்.
அவர் நடிப்பில், மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன.

அவர் இப்போது, சிவகுமாரின் சபதம் அன்பறிவு ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் ஆதி நடிப்பதோடு மட்டுமில்லாமல் இயக்கியும் வருகிறார்.இந்தப் படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். மீசைய முறுக்கு படத்திற்குப் பிறகு ஆதி இயக்கும் படம் இது. இதில் ஆதிக்கு ஜோடியாக மாதுரி நடிக்கிறார்.

அஸ்வின்ராம் என்பவர் இயக்கத்தில் உருவாகும் அன்பறிவு படத்தில் ஹிப் ஹாப் ஆதியுடன், நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், படத்தொகுப்பாளராக ப்ரதீப் ராகவ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இவ்விரு படங்களும் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன என்கிறார்கள்.இவற்றில் சிவகுமாரின் சபதம் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அன்பறிவு படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்திருகிறது.

இந்நிலையில், இப்படங்களுக்கடுத்து ஆதியே இயக்கி நடிக்கும் படம் குறித்த பேச்சுகள் நடந்துவந்தன.அப்படத்தை முன்னாள் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தினர் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால், பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இல்லாததால் அப்படம் நடக்கவில்லையாம்.

எனவே ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படத்தையும் சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கவிருக்கிறதாம். மரகதநாணயம் பட இயக்குநர் சரவண், ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வருமென்கிறார்கள்.

Related Posts