சினிமா செய்திகள்

பிகில் படத்துக்கு நன்மை செய்த தமிழக அரசு

விஜய் நடித்துள்ள பிகில் மற்றும் கார்த்தி நடித்துள்ள கைதி ஆகிய திரைப்படங்கள், தீபாவளியையொட்டி அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவற்றில் விஜய்யின் பிகில் திரைப்படம், பெரிய விலைக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது. தமிழக திரையரங்கு உரிமை சுமார் எண்பத்தைந்து கோடிக்கு வியாபாரம் ஆகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

இவ்வாண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால் படத்தை வெள்ளிக்கிழமை படத்தை வெளியிடுகிறார்கள்.
ஆனாலும் வழக்கம் போல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று விடுமுறை நாட்கள் மட்டுமே இருந்தன. திங்கள் வேலை நாளாக இருந்தது.

இதனால் பெரிய விலை கொடுத்து படத்தை வாங்கியிருக்கிறோம் மூன்று நாட்களில் பெரும்பகுதி பணத்தை எடுக்க முடியாதே என்று பிகில் விநியோகஸ்தர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

தமிழக அரசு அக்டோபர் 21 அன்று, அக்டோபர் 28 ஆம் தேதி அரசு விடுமுறை என்று அறிவித்தது.

இத்னால் மேலும் ஒரு விடுமுறை நாள் கிடைப்பதால் வசூல் நன்றாக இருக்கும் என்கிற மகிழ்ச்சியில் பிகில் விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள்.

Related Posts