சினிமா செய்திகள்

இந்தியன் 2 படம் பற்றிப் பரவிய வதந்தி – படக்குழு விளக்கம்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996 ஆம் வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதில் கமல்ஹாசன் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.இதற்கான திரைக்கதை, வசனம் எழுதும் பணிகள் முடிந்துள்ளன. படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களையும் தேர்வு செய்துவிட்டனர்.

2018 டிசம்பர் 14 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி தொடங்கவில்லை.

இதனால், சமூக வலைத்தளங்களில் இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது.

உடனடியாக படக்குழுவினர் இதனை மறுத்துள்ளனர். இந்தியன்-2 படப்பிடிப்பு வருகிற 18 ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவித்து உள்ளனர்.

Related Posts