சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதன்முறையாக – பிகில் பட ஆச்சரியம்

அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் பிகில். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.

இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியிருக்கிறாரராம். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான வெறித்தனம் என்று தொடங்கும் ஒரு பாடலை விஜய் பாடியிருக்கிறார்.

இந்தத் தகவல் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஒலிப்பதிவுக் கூடத்தில் இயக்குநர் அட்லீ மற்றும் ஏ.ஆர்.ரகுமானுடன் விஜய் நின்றிருக்கும் ஒரு புகைப்படத்தையும் படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இளையராஜா,தேவா, ஹாரிஸ்ஜெயராஜ், டி.இமான், அனிருத் உட்ப்ட பல்வேறு இசைமைப்பாளர்கள் இசையில் விஜய் பாடியிருக்கிறார்.

உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் ஆகிய விஜய் படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தாலும் முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிகில் படத்தில் விஜய் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்தப்பாடல் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய பாடலாக இருக்கிறது.

Related Posts