September 22, 2019
சினிமா செய்திகள்

விஜய் படம் குறித்து வந்த செய்தியில் உண்மையில்லை – இயக்குநர் விளக்கம்

விஜய் இப்போது பிகில் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.அதற்குப் பிறகு மாநகரம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்துக்குப் பிறகு விஜய்யின் 65 ஆவது படத்தை பேரரசு இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது.ஏற்கனவே விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி படங்களை பேரரசு இயக்கி உள்ளார். 2 படங்களுமே நல்ல லாபம் பார்த்தன.

இதுபோல் திருமலை, ஆதி படங்களை இயக்கிய ரமணாவும் விஜய்யை வைத்து புதிய படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக அறிவித்து உள்ளார்.

என்று நாளேடொன்றில் செய்தி வெளியாகியிருந்தது.

இச்செய்திக்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர் ரமணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

அனைவருக்கும் வணக்கம்,

இன்று காலை தமிழ் நாளிதழ் தினத்தந்தி, படித்தேன். அதில், பக்கம் 9 ல் நடிகர் தளபதி திரு. விஜய் அவர்கள் தற்போது நடித்துவரும் படங்களுக்கு பிறகு 65 வது படத்தை எனது மதிப்பிற்குறிய நண்பரும் இயக்குநருமான பேரரசு அவர்களின் இயக்கத்தில் நடிக்க இருப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்தி பிரசுரமாகி உள்ளது.

அச்செய்திப்படி அப்படி அந்த படம் அவர்கள் இருவரும் இணைந்து நடைபெறுமானால், சம்பந்தப்பட்ட இருவரும் என் நண்பர்கள் என்ற முறையில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ஆனால்,

அச்செய்தியின் தொடர்ச்சியாக நான் ( ரமணா) நடிகர் தளபதி திரு விஜய் அவர்களை வைத்து படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக அறிவித்து உள்ளதாகவும் செய்தி பிரசுரக்கப்பட்டுள்ளது.

என் தனிப்பட்ட நலனில் நல்லது நடக்க நினைக்கும் தினத்தந்தி நாளிதழுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 🙏 ஆனால், அச்செய்தியில் துளியும் உண்மையில்லை என்பதும், நான் தினத்தந்தி நாளிதழ் நிருபருரிடமோ அல்லது வேறு எந்த ஒரு பொது ஊடகத்திலொ அப்படி ஒருபொழுதும் கூறவில்லை என்பதையும், நான் தற்போது நடிகர் தளபதி திரு. விஜய் அவர்களை வைத்து படம் இயக்குவதற்கான எந்த ஒரு முயற்சியயையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் இப்பதிவின் மூலம் ஊடகங்களுக்கும், பொது உலகிற்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் என் தனிப்பட்ட முயற்சியில் படம் இயக்க இருப்பதும் அதற்கான பணிகள் முழு வேகத்தில் நடந்துகொண்டிருப்பதும் நிஜம். ஆனால், அது தளபதி திரு. விஜய் அவர்களை வைத்து அல்ல.

எவர் ஒருவரையும் அவர் அனுமதியில்லாமல் பேசவே விரும்பாதவன் நான். அப்படியிருக்க, நடிகர் தளபதி திரு. விஜய் அவர்களுக்கோ, அவரின் புகழுக்கோ தர்மசங்கடத்தை விளைவிக்க இன்றும், என்றும் விரும்ப மாட்டேன்.
அது திரு விஜய் அவர்களுக்கும் தெரியும்.

இயற்கையும், காலமும் எங்களிடையே அப்படி ஒரு சந்தர்பத்தையும், வாய்ப்பையும் வழங்குமானால் அப்போது அதுகுறித்து நானே அச்செய்தியை வெளியிடும் நேர்மையும், பண்பும் எனக்குண்டு.

அதனால் இன்று தினத்தந்தியில் வெளியாகியுள்ள செய்தியில் எனக்கு எந்தவித ஒரு தொடர்பும், பங்கும் இல்லை.
அது அந்த நாளிதழின் தனிப்பட்ட அபிப்பிராயமும், கருத்தும், செய்தியும் ஆகும்.

நன்றி. 🙏

இவன்
ரமணா

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts