சினிமா செய்திகள்

ஜூலை 26 இல் என்னை நோக்கிப் பாயும் தோட்டா – தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கிறது.

படம் தணிக்கை செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது.

பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாகப் பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

அனைத்துச் சிக்கல்களும் பேசி முடிக்கப்பட்டுவிட்டன். எனவே ஜூலை மாதத்தில் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டுவந்தது.

இப்போது கூலை 26 ஆம் தேதி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

இச்செய்தியை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

Related Posts