சினிமா செய்திகள்

டாக்டர் அயலான் ஆகிய படங்களின் தற்போதைய நிலை

சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் இயக்கும் டாக்டர், ரவிக்குமார் இயக்கும் அயலான் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவற்றில் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்படவேண்டியிருக்கிறதாம்.
படத்தை முழுமையாகத் தொகுத்துப் பார்த்துவிட்டு அப்பாடலைப் படமாக்குவதா? வேண்டாமா? என்று முடிவெடுக்கவிருக்கிறார்களாம்.

இதற்கிடையே நவம்பர் 25 முதல் அயலான் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.

25 இல் தொடங்கும் படப்பிடிப்பு பத்துநாட்கள் நடக்குமென்றும் அதன்பின் ஓர் இடைவெளிவிட்டு மீண்டும் தொடங்கவிருக்கிறார்களாம்.

எப்படியும் டிசம்பர் இறுதிக்குள் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே அயலான் படத்துக்கான கணினி வரைகலை வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம்.
அதனால் விரைந்து வெளியீட்டுக்குத் தயாராகிவிடும் என்கிறார்கள்.

டாக்டர் படம் 2021 கோடைவிடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்பின் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பிறகு அயலான் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

Related Posts