சினிமா செய்திகள்

பாலா அழைப்பு ஆர்யா மறுப்பு

அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப்படத்தின் தமிழ் மொழி மாற்றை இயக்கினார் பாலா. ‘வர்மா’ என்ற பெயரில் உருவான இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

அப்படம் முழுமையாக முடிந்த பின்னர், தயாரிப்பாளருக்கும் பாலாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படமே கைவிடப்பட்டது.

அதனால் அடுத்து இரண்டு நாயகர்கள் நடிக்கும் கதை ஒன்றை தயார் செய்திருக்கிறாராம் பாலா.

அதில் நடிக்க ஆர்யா மற்றும் அதர்வா இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் பாலா.

பாலா இயக்கத்தில் ‘நான் கடவுள்’, ‘அவன் இவன்’ படங்களில் ஆர்யாவும், ‘பரதேசி’ படத்தில் அதர்வாவும் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இருவரையும் ஒரே படத்தில் இணைந்து இயக்கவுள்ளார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இதற்கு ஆர்யா ஒப்புக்கொள்ளவில்லையாம்.

அவர் வரிசையாகச் சில படங்களில் ஒப்புக் கொண்டிருப்பதால் பாலா படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டாராம்.

இதனால் அதர்வாவுடன் இணைந்து நடிக்கப் பொருத்தமான இன்னொரு நாயகனை தேடிக் கொண்டிருக்கிறாராம் பாலா.

Related Posts