சினிமா செய்திகள்

துருவநட்சத்திரம் ரிலீஸ் பற்றி கெளதம் மேனன் அறிவிப்பு

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்’. இதில் விக்ரம் நாயகனாகவும், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இப்படம் தொடங்கி இரண்டாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எப்போது வெளியாகும்? என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் திடீரென இப்படம் குறித்து இயக்குநர் கெளதம்மேனன் பேசியிருக்கிறார்.அவர் இது குறித்துக் கூறியிருப்பதாவது….

துருவநட்சத்திரம் படம் என் இதயத்திற்கு நெருக்கமானது சியான் விக்ரமுடன் பணிபுரிந்தது மிகப்பெரிய மற்றும் நேர்மறையான அனுபவம். படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகளில் இருக்கிறோம். இன்னும் 60 நாட்களில் இப்படம் வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்.

இத்தகவல் வெளியானதை விக்ரம் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Related Posts