October 29, 2020
Uncategorized சினிமா செய்திகள்

தனுஷின் கர்ணன் படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல்

பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.

கலைப்புலி தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்கிறார். மலையாள நடிகர் லால் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சனவரி மாதம் திருநெல்வேலியில் தொடங்கியது.

அங்கு இருபத்தைந்து ஏக்கரில் பெரிய செட் போட்டு அதில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தாரகள்.

கொரோனாவுக்கு முன்பாகவே அப்படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.

இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியிருந்த சூழலில் கொரோனா குறுக்கிட்டது.

அதனால் தடைபட்ட படப்பிடிப்பை இப்போது மீண்டும் தொடங்கத் திட்டமிட்டபோது எதிர்பாராத தடை ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் படப்பிடிப்பு நடத்த தேர்வு செய்து வைத்திருந்த ஊரில் இப்போது படப்பிடிப்பு நடத்தக்கூடாது என ஊர் மக்கள் தடை விதித்துவிட்டார்களாம்.

கொரோனா பயம் காரணமாக படப்பிடிப்புக் குழுவினர் யாரும் ஊருக்குள்ளேயே வரக்கூடாது என்று சொல்லிவிட்டார்களாம்.

அவர்களைச் சமாதானப்படுத்தி படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று நினைத்த நேரத்தில், இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட தனுஷ், அந்த ஊர் வேண்டவே வேண்டாம் அங்கே படப்பிடிப்பென்றால் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

இதனால் வேறுவழியின்றி சென்னைக்கு அருகில் அவ்வூர் போலவே செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்களாம்.

அதற்கான செட் அமைக்கும் வேலைகள் தற்போது நடந்துவருகின்றன.

அக்டோபர் 16 முதல் அந்த செட்டில் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார்களாம்.

பத்துநாள் படப்பிடிப்புக்காக எதிர்பாராத பெரும் செலவு ஆகிவிட்டதென படக்குழுவினர் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.

Related Posts