சினிமா செய்திகள்

நம்பமுடியாத புக்கிங், ஆச்சரியத்தில் படக்குழு! #ENPT Final Update

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் நாளை வெளியாகிறது.

தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016 மார்ச் மாதம் துவங்கியது. படத்தின் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனுக்கு இருந்த பொருளாதார சிக்கலினால் படம் தள்ளிப்போனது.

இரண்டு வருடத்துக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய எனைநோக்கி பாயும்தோட்டா படத்தின் சிக்கல்களை சரிசெய்து, படத்தை வெளியிடுகிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

தர்புகா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் பாடல்கள் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. பாடல்கள் முன்னாடியே வெளியாகிவிட்டபடியால், பழையது என்கிற உணர்வு வந்துவிடக்கூடாது என்பதற்காக இசையில் சிறிது மாற்றமும் செய்திருக்கிறார்களாம்.

மற்றுமொரு தகவல் என்னவென்றால், நீண்ட நாட்களாக ஒரு படம் கிடப்பில் கிடந்தால் அப்படத்துக்கு பெரிதாக ஓபனிங் இருக்காது. ஆனால், படத்தின் புக்கிங் துவங்கியதில் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. முதல் நாள் ரிசல்ட் நேர்மறையாக இருந்தால், இன்னும் கலெக்‌ஷன் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் படக்குழு ஆச்சரியத்தில் இருக்கிறதாம். எனைநோக்கி பாயும் தோட்டா படம் குறித்த எதிர்பார்ப்பு இன்னும் குறையவில்லை என்று கூறப்படுகிறது.

எந்த பிரச்னையும் இன்றி, நாளை எட்டு மணி காட்சியிலிருந்தே படம் வெளியாகிறது. பார்த்து மகிழுங்கள்!

Related Posts