சினிமா செய்திகள் நடிகர்

வடசென்னை குறித்து தனுஷ் கூறியிருக்கும் 7 முக்கியமான விசயங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் வடசென்னை படம் குறித்து நிறையப் பேசிவருகிறார் தனுஷ். அவர் பேசியவற்றில் முக்கியமான 7 குறிப்புகள் இங்கே…..

  • வடசென்னைக்கு இருக்கிற தனித்துவமான அரசியல், எதார்த்தம் மற்றும் அழகியல் ஆகிய மூன்றையும் பேசக்கூடிய படமாக வடசென்னை இருக்கும்.
  • வடசென்னை என்கிற பெயரைச் சொன்னால் மற்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு என்னவெல்லாம் தோன்றுமோ? அவையெல்லம் இப்படத்தில் இருக்கும். குறிப்பாகச் சொன்னால்,வடசென்னையின் பண்பாடுகள்.
  • இப்படத்தில் அரசியல் இருக்கிறது. அடித்தட்டு மக்களின் உரிமைக் குரலை வெளிக்கொண்டு வந்திருக்கிறோம்.
  • ஆண்ட்ரியா, சந்திரா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இதற்காக வடசென்னையின் வாழ்க்கை முறை,
    வடசென்னைத் தமிழ் ஆகியனவற்றை இந்தப் படத்துக்காகக் கற்றுக்கொண்டு நடித்தார்.
  • ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பத்மா என்கிற வேடம். அவர் மிகுந்த திறமைசாலி. வடசென்னை அவருக்குப் புதிதில்லை. இந்தப்படத்தில் கேமராவை ஒளித்து வைத்து எடுத்த மாதிரி அவர் நடித்த காட்சிகள் இருக்கும்.
  • வடசென்னைக்கென்று பிரத்தியேகமான இசைக்கருவிகள் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது குறித்து சந்தோஷ்நாராயணன் நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். இசையும், பின்னணி இசையும் தனியாகப் பேசப்படும்.
  • 30 வருடக் கதையை ஒரே படத்தில் பேச முற்பட்டோம். ஆனால் முடியவில்லை. அதனால் 3 பாகங்களாக
    இந்தப் படத்தை எடுக்கவிருக்கிறோம்.

Related Posts