சினிமா செய்திகள்

ஜூலையில் வெளியாகிறது என்னை நோக்கிப் பாயும் தோட்டா

தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா.கெளதம் மேனன் இயக்கியிருக்கிறார்.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கிறது.

படம் தணிக்கை செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது.

பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாகப் பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான ஐசரிகணேஷ், இப்படத்தை வெளியிட உதவி செய்ய முன்வந்திருக்கிறாராம். இதன் காரணமாகப் பட வெளியீட்டில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்திருக்கிறதாம்.

இதனால் ஜூலை மாதத்தில் படம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Related Posts