February 17, 2020
Uncategorized

தர்பார் – தொடரும் சோதனைகள் வசூல் பாதிப்பு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. படம் வெளியானதிலிருந்து பல்வேறு சோதனைகளைச் சந்தித்து வருகிறது.

படம் வெளியான முதல்நாளே இணையதளங்களில் அப்படம் வெளியானது. அதன்பின், இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக வாட்ஸ்-அப்பில் மூன்று பாகங்களாகப் படம் பகிரப்பட்டது.

இதற்கெதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரையில் இயங்கும் ஒரு தனியார் கேபிள் டிவியில் ’தர்பார்’ படத்தை ஒளிபரப்பியிருக்கிறார்கள்.

மதுரை அருகில் இயங்கும் சரண்யா கேபிள் டிவி நெட் ஒர்க் நிறுவனம் சட்ட விரோதமாக கடந்த சனவரி 12 ஆம் தேதி ‘தர்பார்’ படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்பியுள்ளது.

இதனால், லைகா நிறுவனமும், மதுரை விநியோகஸ்தரும் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறார்கள்.

சட்டவிரோதமான இந்த ஒளிபரப்பை லைகா நிறுவனம் கண்டிப்பதுடன் காவல் துறை ஆணையரிடம் இது குறித்து கடுமையான நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு கோரியுள்ளது.

மேலும், ‘தர்பார்’ படத்தை மதுரையில் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கும் சி.எல்.என் சினிமாஸ் நிறுவனமும் இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்திருக்கிறது.

தர்பார் படம் வெளியானதிலிருந்து இதுபோன்று தொடர் சோதனைகளைச் சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts