சினிமா செய்திகள்

தர்பார் படப்பிடிப்பு குறித்து லைகா நிறுவனம் புதிய தகவல்

ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக்கதையை உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது.

சுமார் முப்பத்தைந்து நாட்கள் நடைபெற்ற அப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மே 29 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தத் தகவலை படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் கூறியுள்ளது.

Related Posts