December 9, 2021
சினிமா செய்திகள்

தர்பார் வியாபாரம் – லைகா பேராசை ரஜினி அதிருப்தி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள தர்பார் படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ளது.
இந்தப்படத்தைத் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற பலர் போட்டியிடுக்கிறார்களாம்.

அதில் சன் பிக்சர்ஸ், வேல்ஸ் ஃபிலிம்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் அடக்கம். இவர்கள் மட்டுமின்றி துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்னணியில் இயக்குநர் ஷங்கரின் மைத்துனர் பாலாஜியும் இப்படத்தை வாங்கி வெளியிட முயல்கிறாராம்.

இப்படிப் பலர் போட்டியிடுவதால், தர்பார் படத்தின் தமிழக உரிமைக்கான தொகையை உயர்த்திவிட்டதாம் லைகா நிறுவனம்.

தர்பார் தமிழக உரிமைக்காக லைகா நிறுவனம் சுமார் எழுபது கோடி அல்லது அதற்கு மேல் வேண்டும் என்று கேட்கிறதாம்.
ஆனால் எல்லா விநியோகஸ்தர்களும் அறுபது கோடிக்குள்ளேயே இருக்கிறார்களாம்.இதனால் வியாபாரம் முடியாமல் இழுத்துக்கொண்டிருக்கிறதாம்.

சன்பிக்சர்ஸ் தயாரித்த ரஜினியின் பேட்ட படத்தின் தமிழக வசூலில் தயாரிப்பாளரின் பங்கு சுமார் 52 கோடி என்று சொல்லப்படுகிறது.
 
அப்படி இருக்கும் நிலையில் இந்தப்படத்துக்கு எழுபது எண்பது என்று விலை சொல்வது பேராசை. 2.ஓ படத்துக்கும் இதேபோல் போட்டியிருந்ததென பெரும் விலை சொன்னது லைகா. 

அவ்வளவு கொடுத்து வாங்கிய அனைவரும் நட்டப்பட்டனர். இப்போது தர்பார் படத்துக்கும் அதேநிலை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

இந்த விவரங்களை அறிந்த ரஜினி, லைகா ஏன் இப்படிச் செய்கிறார்கள்? என்று அதிருப்தியடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts