சினிமா செய்திகள்

தர்பார் வியாபாரத்தில் இழுபறி – லைகா புது முடிவு

ரஜினிகாந்த் நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ள தர்பார் படம் 2020 பொங்கலையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிற நிலையில் இன்னும் இப்படத்தின் வியாபார விசயத்தில் திடமான முடிவு எடுக்கப்படவில்லையாம்.

இந்தப்படத்தைத் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையைப் பெற பலர் போட்டியிடுகிறார்களாம்.
இப்படிப் பலர் போட்டியிடுவதால், தர்பார் படத்தின் தமிழக உரிமைக்கான தொகையை உயர்த்திவிட்டதாம் லைகா நிறுவனம்.

தர்பார் தமிழக உரிமைக்காக லைகா நிறுவனம் சுமார் எழுபது கோடி அல்லது அதற்கு மேல் வேண்டும் என்று கேட்கிறதாம்.ஆனால் எல்லா விநியோகஸ்தர்களும் அறுபது கோடிக்குள்ளேயே இருக்கிறார்களாம்.இதனால் வியாபாரம் முடியாமல் இழுத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது.

சன்பிக்சர்ஸ் தயாரித்த ரஜினியின் பேட்ட படத்தின் தமிழக வசூலில் தயாரிப்பாளரின் பங்கு சுமார் 52 கோடி என்று சொல்லப்படுகிறது என்பதால் விநியோகஸ்தர்கள் தயங்குகிறார்களாம்.

இதனால், தமிழக திரையரங்கு உரிமையை மொத்தமாக ஒருவரிடம் கொடுக்காமல் ஒவ்வொரு விநியோகப்பகுதிக்கும் தனித்தனி விநியோகஸ்தர்களிடம் கொடுக்கும் முடிவை எடுத்திருக்கிறதாம் லைகா நிறுவனம்.

அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருக்கிறதென்கிறார்கள்.

Related Posts