சினிமா செய்திகள்

கோமாளி பட டிரெய்லர் – ரஜினி சர்ச்சைக்கு தீர்வு

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’.பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள அந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்தப் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப்படத்தின் முன்னோட்டம், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த முன்னோட்டத்தில், ரஜினி பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதைக் கிண்டல் செய்வது போல் இருந்தது. இதற்கு ரஜினி ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இந்நிலையில் ‘கோமாளி’ முன்னோட்டத்தைப் பார்த்த நடிகர் கமலும், தன் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.

இதனால், படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனும் இணைந்து வெளியிட்டுள்ள காணொலி பதிவில்,

நாங்கள் இருவருமே ரஜினி ரசிகர்கள்தாம். எனவே அவரைக் குறைத்து மதிப்பிடும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எங்கள் டிரெய்லரில் உள்ள காட்சி ஒரு சிலருக்கு வருத்தம் கொடுத்திருப்பதை அறிந்தோம். கமல் சாரும் தொலைபேசியில் என்னிடம் (தயாரிப்பாளர்) பேசினார். எனவே படத்தில் அந்தக் காட்சியை நீக்கிவிட முடிவு செய்திருக்கிறோம். ரஜினி ரசிகர்கள் எல்லோரும் மகிழக்கூடிய வகையில் அந்தக் காட்சி மாற்றப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதற்கு ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related Posts