September 23, 2020
சினிமா செய்திகள்

காப்பான் விமர்சனங்களுக்கு விளக்கம்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியானது. அப்படம் வரவேற்பு மற்றும் விமர்சனங்களை ஒருசேரச் சந்தித்து வருகிறது.

அப்படம் குறித்து வெளியான பல்வேறு விமர்சனங்களுக்கு அவ்வப்போது விளக்கம் கொடுத்து வருகிறார் படத்தின் கலை இயக்க்நரும் நடிகருமான கிரண்.

அவர் கூறியிருக்கும் விளக்கங்கள்…..

விமர்சனம் செய்வது என்பதே தவறு.. அதிலும் மற்றவரை ஒருமையில் அப்படி செய்ச்சீட்டான்.. இப்படி செய்ச்சான் என்பது மிகவும் தவறு..

26 /28 வயதில் பிடிக்காத அரசியலில் பெரிய பதவியை கொடுத்தாலும்.. பதவியின் தன்மையை உணராமல் அவனுக்கு பிடித்ததை தான் அவன் செய்வான்..அது குடிப்பதாக இருந்தாலும்

பிரதமர் Office ல் எப்படி bug செய்யமுடியும் என்று ஒரு விமர்சனம். ஏன்.? எந்த பிரதமரையும் அப்படி செய்தது இல்லையா.? இந்தியாவின் 5 வது பிரதமர் சரண்சிங் அவர்களின் வரலாற்றை தெரிந்து சொல்லுங்கள்

ஒரு விமர்சனத்தில்.. வீரம் இல்லாத வில்லன் பொம்மன் என்று.. ஒருவன் பிரதமர் வீட்டிலே table யை பிரதமர் முன்பே எட்டி உதைப்பதை விட என்ன வீரம் வேண்டும்.?Corporate முதலாளி வீரத்தை அறிவிலே காட்டுவான்

#Kaappaan ல் ஏதோ இயற்கை விவசாய பொருட்களை சாப்பிட முடியாத அளவுக்கு அருவெறுப்பான முறைகள் சொல்கிறார்கள் -விமர்சனம்..அப்போ chemicalயை போட்டு சாப்பிடுற விவசாயமும் அதனால் வரும் பிரச்சனைகளும் ok வா.?

PM.. Pakistanக்காக பேசுகிறாரே அவர் எந்த நாட்டு பிரதமர் என ஒரு விமர்சனம்.ஏன்.?PM என்றால் மனிதாபிமானம் இருக்ககூடாதா.? பிரதமரும் மனிதன் தானே.?அப்படி ஒரு பிரதமர் நமக்கு வரவேண்டாமா.?

#Kaappaan ல் London.Delhi. Kashmir என எல்லா இடங்களில் உள்ள ஆட்கள் எல்லாம் தமிழிலே பேசுகிறார்களலாம்.. ஏன்.?பா.. நாம தமிழுக்கு தானே படம் எடுக்கிறோம். அடுத்த மொழியோ..subtitleலும் என் பாமர ரசிகனுக்கு புரியாத காரணத்திற்காகவே இது..

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கிய விளக்கம் இன்னும் தொடருகிறது.

Related Posts