Home Archive by category Uncategorized

Uncategorized

Uncategorized விமர்சனம்

பட்டாம்பூச்சி – திரைப்பட விமர்சனம்

பட்டாம்பூச்சி என்கிற பெயரைப் பார்த்ததும் சுந்தர்.சியின் நகைச்சுவை கலந்து ஓர் அழகான காதல் கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். அப்பாவால் ஒதுக்கப்பட்ட ஓர் இளைஞனின் மனப்பிறழ்வால் அதிரவைக்கும் இரத்தத் தெறிப்புகளுடன் தொடக்கம் முதல் இறுதிவரை படபடப்புடனே வைத்திருக்கிறார்கள்.
Uncategorized

உதயநிதி முன்னிலையில் சுபாஸ்கரன் கமல் சமரசம்

விக்ரம் படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கவிருக்கும் படம் குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. அடுத்து மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது. இந்தப்படத்தையும் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இப்போது அதில் மாற்றம் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. டான் படத்தின் வெற்றிவிழாவில் கலந்து
Uncategorized சினிமா செய்திகள்

இது ராசியில்லாத எண்ணா? – 13 படநிகழ்வில் ஜி.வி.பிரகாஷ் விளக்கம்

ஜி.வி.பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படம் வெற்றியடைந்தது. அப்படத்தில் இருவரும் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த வெற்றிக் கூட்டணி  இப்போது ’13’ என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள், இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
Uncategorized சினிமா செய்திகள்

அனிருத்தின் அடாவடி – கொலைவெறியில் விக்ரம் படக்குழு

லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில், கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில்,நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் விக்ரம். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் ஜூன் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படவெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. வெளிநாடுகளுக்கு மூன்று நாட்கள் முன்னதாக படம்
Uncategorized விமர்சனம்

விஷமக்காரன் – திரைப்பட விமர்சனம்

மனிதர்களைக் கையாளுதல் என்பதில் கெட்டிக்காரராக இருக்கும் கதாநாயகன். அவருக்கு ஒரு காதலி. அந்தக் காதலிக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய ஆசை. அவர் வெளிநாடு சென்றால் பிரியவேண்டி வருமே என்பதால் நாயகன் அதற்கு உடன்படாமல் செய்யும் ஒரு காரியம். அவர்களை நிரந்தரமாகப் பிரித்துவிடுகிறது. அதன்பின் நாயகனுக்கு இன்னொரு காதல். அது கல்யாணத்தில் முடிகிறது. மகிழ்ச்சியான வாழ்க்கையில் வருகிறார்
Uncategorized சினிமா செய்திகள்

பெரிய விலைக்கு விற்ற வெந்து தணிந்தது காடு – சிம்பு உற்சாகம்

கௌதம்மேனன் – ஏ.ஆர்.ரகுமான் – சிம்பு கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. விண்ணைத் தாண்டி வருவாயா, ‘அச்சம் என்பது மடமையாடா’ ஆகிய படங்களுக்குப் பிறகு உருவாகியிருக்கும் இந்தக் கூட்டணிக்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஐசரி கணேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தி இதானி நாயகியாக
Uncategorized

ஆர்.கே.சுரேஷ் உடன் நடிக்கும்போது அழுதேன் – பூர்ணா வெளிப்படை

இயக்குநர் பாலா தயாரிப்பில், ஆர்.கே.சுரேஷ், பூர்ணா, பக்ஸ், மாரிமுத்து, இளவரசு, மதுஷாலினி மற்றும் பலரின் நடிப்பில் ஜி வி பிரகாஷ் இசையில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் உருவான படம் “விசித்திரன்”. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பிரபலங்களுக்கான சிறப்புக் காட்சி நடைபெற்றது. அப்போது பிரபலங்கள் படம் பற்றிய கருத்துகளைத் தெரிவித்தனர். அவற்றின் தொகுப்பு…. பிக் பாஸ்
Uncategorized சினிமா செய்திகள்

அடுத்தடுத்து 5 முக்கிய படங்களை வெளியிடும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் – திரையுலகில் பரபரப்பு

இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தைத் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளீயிட்டுள்ளது உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம். இதற்கடுத்து ஏப்ரல் 28 ஆம் வெளியாகவுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு
Uncategorized சினிமா செய்திகள்

கேஜிஎஃப் 2 படத்தால் 30 கோடி இழப்பு – பீஸ்ட் படக்குழு அதிர்ச்சி

விஜய் பூஜாஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் பீஸ்ட். நெல்சன் இயக்கியுள்ள இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு திரையரங்குகளில் இந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. எஃப் எம் எஸ் எனப்படும் பன்னாட்டுத் திரையிடும் உரிமையை
Uncategorized சினிமா செய்திகள்

டான் புதிய வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “டான்”.புது இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி,